நடிகை வனிதா விஜயகுமார், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையிலும் சரி படு பிஸியாகி விட்டார்.
பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்திலும் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார் வனிதா விஜயகுமார்.
சில தினங்களுக்கு முன்பு வனிதா 4-வது திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது.
இதற்கு வனிதா மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் நடிகை வனிதா, தனது ட்விட்டர் பக்கத்தில், பிரபல நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் உடன் மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்துகொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் ரசிகர்கள் பலரும் அவர்கள் திருமணம் செய்துகொண்டதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தான் தெலுங்கு நடிகர் நிரோஸுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, புது ப்ராஜெக்ட், விரைவில் வருகிறது, யூகித்துக் கொண்டிருங்கள் என்றார்.
அந்த புகைப்படத்தை பார்த்த சமூக வலைதளவாசிகள் வனிதாவை கலாய்த்துள்ளனர். லிஸ்ட்டு ரொம்ப பெருசா போகுதே. இவர் தான் உங்களின் 4வது கணவரா, சின்னப் பையன் மாதிரி இருக்காரே. பழைய ப்ராஜெக்ட் உயிருடன் இருக்கிறதா?
மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் கிடைத்துவிட்டது என்று தெரிவித்துள்ளனர்.