விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘நெற்றிக்கண்’. ‘அவள்’ படத்தின் இயக்குநரான மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கிரிஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படம் ‘ப்ளைண்ட்’ என்ற கொரியப் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும்.
நெற்றிக்கண் திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. முன்னதாக கவிஞர் கார்த்திக் நேத்தா வரிகளில் பாடகர் சிட் ஸ்ரீராம் குரலில் இதுவும் கடந்து போகும் என்னும் முதல் பாடல் வெளியான நிலையில் தற்போது இரண்டாவது பாடலாக நெற்றிக்கண் படத்தில் இருந்து விருவிருப்பான டைட்டில் டிராக் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.