90-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் என அப்போதைய முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டவர்.

அதோடு ரியாலிட்டி ஷோக்களில் இணை ஜட்ஜாக இருந்தார். நிஜங்கள், கோடீஸ்வரி மற்றும் நம்ம வீட்டு மகாலட்சுமி, சிம்ப்ளி குஷ்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கோகுலத்தில் சீதை’ சீரியலில் டாக்டர் மங்களமாக நடித்து வருகிறார்.

இதற்கிடையே தீவிர உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் தனது உடல் எடையை சரமாரியாகக் குறைத்திருக்கிறார் குஷ்பு. இதனை தனது இன்ஸ்ட்டா கிராமில் புகைப்படம் மூலம் தெரிவித்துள்ளார் .

https://www.instagram.com/p/CSL3rRYBWHv/