சிம்பு – கெளதம் மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் படத்துக்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ எனப் பெயரிடப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன. சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் பெயர் மாற்றப்படவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.

இதனிடையே, இன்று (ஆகஸ்ட் 6) திருச்செந்தூரில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்துக்கு ‘வெந்து தணிந்தது காடு’ என்று பாரதியாரின் கவிதை வரிகளைப் பெயராக வைத்துள்ளது படக்குழு.

இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது. இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியராக தாமரை ஆகியோர் பணிபுரிந்து வந்தார்கள்.