நந்தா பெரியசாமி ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தை இயக்கி வருகிறார்.
கௌதம் கார்த்திக் நாயகனாகவும் முக்கிய வேடத்தில் சேரனும் நடித்து வந்தனர்.
திண்டுக்கல்லில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. திருமணம் முடித்த கையோடு பாடலாசிரியர் சினேகன் இந்தப் படத்தின் படப்பிடிப்பில்தான் முதலில் கலந்து கொண்டார்.
படப்பிடிப்பில் கட்டப்பட்டு வரும் வீட்டின் மேலே ஏறியவர் கடைசி நிமிடத்தில் கால்இடறி கீழேவிழ தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துசென்றனர். அங்கு அவருக்கு தலையில் எட்டு தையல்கள் போடப்பட்டன. மருத்துவமனையிலிருந்து திரும்பியவர், இயக்குனர் தடுத்தும் கேளாமல், தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை நடித்துக் கொடுத்திருக்கிறார்.