சென்னை: உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் “தாய்ப்பாலூட்டும் அறை”யை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார்.

ஒவ்வொரு ஆண்டும் உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, தாய்ப்பால் வாரத்திற்கான கருப்பொருள் “தாய்ப்பால் பாதுகாத்தல்  அனைவருக்குமான பொறுப்பு” என்பதாகும். தாய்ப்பால் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும். ஆனால், நவின யுகங்களில் இளம்பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதை தவிர்த்து வருகின்றனர்.  ஆய்வுகளின்படி, கிட்டத்தட்ட 3 குழந்தைகளில் 2 குழந்தைகளுக்கு குறைந்தப்பட்சம் 6 மாதங்கள் கூட தாய்ப்பால் கொடுக்கப்படுவதில்லை என்பது தெரிய வந்துள்ளது. உலகளாவிய அளவில் தாய்ப்பால் கொடுப்பது கட்டாயமாக்கினால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8,20,000 குழந்தை உயிர்கள் காப்பாற்றப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. அதன் காரணமாக உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி,  ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் “தாய்ப்பாலூட்டும் அறை”திறக்கப்பட்டது. தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, அறையை திறந்து வைத்ததுடன்,   தமிழக தொடர்ந்து விழிப்புணர்வு நாடகம் மற்றும் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.