டெல்லி: பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மீண்டும் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், டெலிபோன் ஒட்டுக்கேட்பு விவகாரமான பெகாசஸ் விவகாரம். வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்களும், நாடாளுமன்ற இரு அவைகளையும் முடக்கி உள்ளன. இருந்தாலும், இடையிடையே அமளிகளுக்கு இடையில் நடைபெற்றுவருகிறது, சில மதசோதாக்களும் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று மக்களவை கூடியதும், தமிழ்நாட்டைச் சேர்ந்ம மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் குறித்து விவாதிக்கவும், உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தவும் கோரிக்கைவிடுத்து ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை அளித்தார்.
இந்த நோட்டீஸ் பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அளிக்கப்பட்டது.
முன்னதாக ஏற்கனவே மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் மனீஷ் திவாரி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை அளித்தனர். ஆனால், அதுகுறித்து விவாதிக்க இதுவரை பாராளுமன்ற சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.