சென்னை: தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டுக்கு 85% கல்வி கட்டணம் வசூலிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைன் கல்வி என்ற பெயரில் கட்டணக்கொள்ளை அடித்து வருகிறது. இதற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து தனியார் பள்ளிகள் முழுக் கட்டணம் வசூலிக்க அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கன் பல்வேறு விசாரணைகளைத் தொடர்ந்து இன்று தீர்ப்பு கூறப்பட்டது.
விசாரணையின்போது, கட்டண சலுகை பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் கட்டணம் செலுத்ததாக மாணவர்கள் நீக்கப்படமாட்டார்கள் எனவும் பள்ளிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டுக்கு 85% கல்வி கட்டணம் வசூலிக்கலாம் என்று தெரிவித்துள்ளது மேலும், கொரோனா சூழலால் வேலை இழந்தவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை குறித்து பள்ளிகளிடம் முறையிடலாம் என்றும், ஆர்டிஇ சட்டத்தில் நிரப்பப்படாத இடங்களை கட்டணம் செலுத்த இயலாதவர்களுக்கு ஒதுக்க தமிழக அரசு பரிசீலிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.