டோக்கியோ: ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி ஸ்பெயினை 3-0 என வீழ்த்தி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. அடுத்ததாக லிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினாவை இந்திய அணி எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணி டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. கடந்த 24ந்தேதி நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது. 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில், இந்தியா தோல்வி அடைந்தது. இதையடுத்து, 3வது ஆட்டத்தில் ஸ்பெயின் அணியுடன் மோதியது.
3-வது லீக் ஆட்டத்தில் ஸ்பெயினை எதிர்கொண்டது. இரு நாட்டு வீரர்களும் ஆவேசமாக ஆடினர். இந்திய வீரர்கள் அடுத்தக்கட்டத்துக்குள் நுழைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆக்ரோசமாக ஆடினர். ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் இந்தியவீரர் சிம்ரன்ஜித் சிங் முதல் கோலை பதிவு செய்தார். தொடர்ந்து அடுத்த நிமிடத்தில் மற்றொரு வீரரான ரூபிந்தர்பால் சிங் அடுத்த கோல் அடித்தார். அடுத்தடுத்த கோல்களினால் ஸ்பெயின் செய்தவறியாமல் முன்னேறியது.
முதல் கால்பகுதி ஆட்டத்தில் இந்தியா 2-0 என முதலிடம் முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2-வது மற்றும் 3-வது காலிறுதி பகுதி ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இரு அணியினரும் கோலை நெருங்க முடியாத அளவில் ஆட்டம் தொடர்ந்து வருகிறது. கடைசியாக 4-வது காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர், ருபிந்தர் பால் சிங் (51) மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்தியா 3-0 என ஸ்பெயினை வீழ்த்தியது.
இந்திய ஹாக்கி அணி, அடுத்து ஒலிம்பிக் சாம்பியனான அர்ஜென்டினாவை வரும் வியாழக்கிழமை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை இந்திய ஹாக்கி அணி ஆடிய 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்றுள்ளது.