ஆபாச திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் மியா கலிஃபா.தனது பள்ளி காதலனை கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட மியா கருத்து வேறுபாடு காரணமாக 2016ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.
இதையடுத்து கடந்த 2020 மார்ச் மாதம் ஸ்வீடனை சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க்குடன் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார்.
கொரோனா பிரச்சனை காரணமாக திருமணம் தள்ளி போய்க்கொண்டிருந்தது. இதனால், அவர்கள் இருவரும் எளிமையான முறையில் வீட்டிலே திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தனர்.
இந்நிலையில், நாங்கள் இருவரும் பிரிந்து வெவ்வேறு பாதையில் செல்ல திட்டமிட்டுள்ளதாக மியா அறிவித்துள்ளார். மேலும், விவாகரத்து பெறுபவர்களுக்கு வருத்தம் தெரிவிப்பதற்கு பதிலாக வாழ்த்து தெரிவியுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.