இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூ-ட்யூப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
ஹிப்ஹாப் ஆல்பம் பாடல்களை இசையமைத்து பாடி வெளியிட்டு வந்தவர் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தின் மூலம் சினிமா இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இந்நிலையில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. அதில் இருந்த அவரது ஏராளமான ஆல்பம் பாடல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த சேனலில் பெயரும் மாற்றப்பட்டுள்ளது. 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் பக்கம் முடக்கப்பட்டது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.