ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

 
பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா, “கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜாவின் மகள் இந்தியாவை உடைப்போம்  என்று கோசம் போட்டிருக்கிறார். இப்படி என் மகள் கோசம் போட்டால் அவளை நான் சுட்டுக்கொன்றிருப்பேன்” என்று கருத்து தெரிவித்திருந்தார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அருணமன், ஹெச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அருணன் எழுதிய முகநூல் பதிவு:
s
“கம்யூனிஸ்டு டி ராஜா தனது மகளை சுட்டுக் கொல்லச் சொல்ல வேண்டும், யெச்சூரி
நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்று பேட்டி கொடுத்திருக்கிறார் பா ஜ க வின்
தேசியச் செயலாளர் எச் ராஜா. ஏனிந்தக் கொலைவெறி ? தோழர் டி ராஜாவின் மகள்
“இந்தியாவை உடைப்போம்” என்று கோஷம் போட்டாராம்! அத்தகைய மாணவர்களை
யெச்சூரி ஆதரித்தாராம்!

இந்திய கம்யூனிஸ்டுகள் நாட்டின் ஒற்றுமையைக் காப்பதில்
தங்கள் இன்னுயிரைத் தத்தம் செய்தவர்கள் என்பதை பஞ்சாபின் வரலாறு சொல்லும்.
பிரிவினைவாத பிந்திரன்வாலா கோஷ்டியை தொடக்கம் முதல் இறுதிவரை எதிர்த்த
வர்கள் கம்யூனிஸ்டுகள்தாம் என்பதை நாடறியும். காஷ்மீரிலும் பிரிவினைவாதிகளை
எதிர்த்து போராடி வருகிறவர்கள் அவர்கள்தாம்.

ஆனால் பஞ்சாபிலும் காஷ்மீரிலும்
பிரிவினைவாதிகளை  மறைமுகமாக ஆதரிக்கும் கட்சிகளோடு பதவி அரசியல் ஆதாய
த்திற்காக உறவு வைத்திருக்கும் கட்சி சாட்சாத் பா ஜ கதான். பாபர் மசூதியை இடித்து
இந்திய மக்களின் மனங்களை மதரீதியாகப் பிளக்க முயன்றதும் பாஜ கதான். அந்தக்
கட்சியின் தலைவருக்கு தேசஒருமைப்பாடு பற்றி எங்களுக்கு புத்திசொல்ல எந்த
யோக்யதையும் கிடையாது. தோழர் டி ராஜாவின் மகள் மட்டுமல்ல ஜே என் யூ
மாணவர் தலைவர் கன்கையா குமாரும் அத்தகைய பிரிவினை கோஷங்களை எழுப்ப
வில்லை, அதைச் செய்தது சதிகார பா ஜ க மாணவர் பிரிவுதான் எனும் உண்மை
இப்போது வெளியாகியிருக்கிறது.

அப்படியும் ரத்த தாகம் கொண்டலைகிறார் பா ஜ க
தலைவர். அந்தக் கட்சியின் கோரமுகம் வெளிப்பட்டுப் போனது ; தமிழகத்தின்
ஜனநாயகக் கட்சிகள் எச்சரிக்கை கொள்ளட்டும்.”