சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக ஆளுநரிடம் மனுகொடுத்தபோது, புகைப்படம் எடுக்க மறுத்த பன்வாரிலால் புரோகித், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன்யுடன் புகைப்படம் எடுத்துள்ளார். ஆளுநரின் நடவடிக்கை ஏற்புடடையதல்ல என்று தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தமிழக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சுதா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், பெட்ரோல், டீசல் எரிவாயு பொருட்கள் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின்போது, ஆளுநரை சந்தித்து மனுகொடுக்க சென்றபோது, புகைப்படம் எடுக்கும் பழக்கமில்லை என்று வினவி மறுத்தார். ஆனால், அவரை‘ சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது. இது ஆளுநரின் மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது. இது ஜனநாயக நாட்டிற்கு ஏற்புடையதல்ல. முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இது ஆளுநருக்கு அழகல்ல என்று தெரிவித்துள்ளார்.


Patrikai.com official YouTube Channel