sta
 
“மின்சார கட்டணத்தை ஒரு பைசா உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அறவழியில் போராடினார்கள்.அப்படி அறவழியில் அமைதியாகப் போராடிய விவசாயிகள் மீது அன்றைய எம்ஜிஆர் அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது..” என்று சமீபத்தில் ஈரோட்டில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் திமுக வின் முதல்வர் வேட்பாளரும்-நமக்கு நாமமே படத்தின் கதாநாயகனுமான ஸ்டாலின் வீராவேசமாக முழங்கியதைக் கேட்க முடிந்தது.
மற்றவர்களை விடுங்க-இந்த பேச்சை கருணாநிதி கேட்டிருந்தால் கூட,அடடா இவரா அடுத்து திமுகவின் முதல்வர் வேட்பாளர் என்று நொந்து வெந்திருப்பார்.

ஸ்டாலின் குறிப்பிட்ட அந்த ஒரு பைசா மின்சாரக் கட்டண எதிர்ப்பு போராட்டம் நடந்தது உண்மை.
துப்பாக்கிச் சூடு நடந்ததும் உண்மை.
எம்ஜிஆர் ஆட்சிக்காலத்திலும் விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது.ஆனால் ஸ்டாலின் குறிப்பிட்ட துப்பாக்கிச் சூடு நடந்த போது தமிழக முதல்வராக இருந்தவர் எம்ஜிஆர் அல்ல.ஸ்டாலினைப் பெற்ற தந்தையும்-திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி தான் முதல்வராக இருந்தார்.விவசாயிகள் மீதான துப்பாக்கிச்சூட்டை தொடங்கியது கருணாநிதி ஆட்சிக்காலத்தல் தான்.இந்தச் சம்பவம் நடந்தது 1973 களில்.அந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பின்னரே நாராயணசாமி நாயுடு தலைமையிலான உழவர் பாதுகாப்பு இயக்கம் வலுவடைந்து-விவசாயிகள் போராட்டம் தமிழ்நாட்டையே உலுக்கியது.
நிற்க…
இதெல்லாம் வரலாறு.
நாராயணசாமி நாயுடுவுடன் அன்றைக்கு நெருங்கியத் தொடர்புகளில் இருந்த திரு.செல்லமுத்து அவர்கள் கூட அன்றைக்கு மேடையில் இருந்தார்.அவரிடம் கேட்டிருந்தால் அவராவது வரலாற்றை கூறியிருப்பார்.அதையும் கேட்கவில்லை.
அக்காலகட்டங்களில் நடந்த விவசாயப் போராட்டங்களைப் பற்றி தன் வலைப்பக்கத்தில் விவரமாகவும்,ஆதாரங்களோடும் Radhakrishnan KS பதிவிட்டுள்ளளார்.அவரிடம் கூட கேட்டிருக்கலாம்.அதையும் கூட செய்யவில்லை.
இப்படி அந்த வரலாற்றைப் பற்றி அரைகுறையாகக் கூட தெரிந்து கொள்ளாமல்-தன் தந்தை நடத்திய துப்பாக்கிச் சூட்டை-மகனே மேடை போட்டு விளக்கியதை என்னவென்று சொல்ல!!!!
ஒரு வேளை சபரீசன் எழுதித் தந்த டயலாக்கில் இந்த எஸ்டிடி இல்லையோ?

– G Durai Mohanaraju (முகநூல் பதிவு)