நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராயல்ஸ் காருக்கு வரி குறைப்பு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தத்துடன் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தது. அந்த அபராதத் தொகையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
நடிகர்கள் ரியல் ஹுரோவாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோவாக இருக்க கூடாது என்றும் நீதிமன்றம் கடுமையாக சாடியது.
இந்த நிலையில், சொகுசு கார் நுழைவு வரி விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விஜய் முடிவு செய்துள்ளார். நீதிமன்றம் தனது தீர்ப்பில் பதிவு செய்துள்ள குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் ஆட்சேபம் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ள விஜய்யின் வழக்கறிஞர், மன வருத்தமளிக்கும் கருத்துகளை நீதிபதி தெரிவித்திருக்க கூடாது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமையின் அடிப்படையிலேயே மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வரி செலுத்தக்கூடாது என்பது தங்களின் நோக்கம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.