இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல். இதனை வி.கிரியேஷன்ஸ் சார்பில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.
ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் தந்தை, மகன் என இருவேடங்களில் சூர்யா நடிக்கிறார்.
சூரி நடிக்கும் ‘விடுதலை’ படத்தை முடித்து விட்டு வாடி வாசல் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ’டைட்டில் லுக்’ போஸ்டர் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அறிவித்துள்ளார்.
வாடிவாசல் பற்றிய அறிவிப்பிற்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தமிழ் நெஞ்சங்களுக்கு நல்விருந்தாய், #வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை நாளை மாலை 5:30'க்கு வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். #VaadiVaasalTitleLookTomorrow @Suriya_offl @VetriMaaran @gvprakash #VaadiVaasal pic.twitter.com/PCJj6fJaVA
— Kalaippuli S Thanu (@theVcreations) July 15, 2021