பாரிஸ்:
ண்ணமயமான வான வேடிக்கைகள், முப்படைகளின் அணிவகுப்பு, விமானப்படை சாகசங்களுடன் பிரான்சில் தேசிய தினம் கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்த கொண்டாட்டங்களை முன்னிட்டு  பாரிஸில் உள்ள சாம்ப்ஸ் எலிசீஸின் புகழ்பெற்ற அவென்யூவில் பராம்பரிய இராணுவ அணிவகுப்புடன் நடத்தப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக,  25,000 பேருக்கு பதிலாக 10,000 பேர் மட்டுமே பார்வையாளர்களாக அனுமதிப்பட்டனர்.  இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர்.  மாலை நேரத்தில் ஈபிள் கோபுரம் மற்றும் பல பிரெஞ்சு நகரங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

இந்த கொண்டாட்டத்தின் போது,  221 கவச வாகனங்கள், 200 குதிரைகள் மற்றும் 97 ஜெட் மற்றும் ஹெலிகாப்டர்களுடன் பிரெஞ்சு இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த சுமார் 5,000 ராணுவ வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர்.

ஆண்டுதோறும் ஜூலை 14 அன்று பிரான்சின் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.