புதுடெல்லி:
தமிழகத்தில் மேலும் 4 நகரங்களில் புதியதாக நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழகத்தில் மேலும் 4 நகரங்களில் புதியதாக நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்றும், இந்த மையங்கள், செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.