சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் வனிதா விஜயகுமார்.
பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். சமீபத்தில், பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
இந்நிலையில், வனிதா தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ‘கொடூரன்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்துக்கான பூஜை நேற்று (ஜூலை 14-ஆம் தேதி) போடப்பட்டதாம். இந்த தகவலை வனிதாவே இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதில் ஹீரோ – ஹீரோயினாக வெற்றி – வித்யா பிரதீப் நடிக்க உள்ளனர்.