கவிஞர் காளிதாசர் எழுதிய சமஸ்கிருத நாடகம் ’அபிஜன ஷாகுந்தலம்’. இதில் ஷகுந்தலம் கதாபாத்திரத்தை வைத்து இயக்குநர் குணசேகர் புராணத் திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். குணா டீம் வொர்க்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்து வருகிறது.

இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுனின் மகள் அர்ஹா. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் முதல் படமாக இது அமைந்துள்ளது.

“அல்லு குடும்பத்தினருக்கு இது பெருமைமிகு தருணம், நான்காம் தலைமுறையைச் சேர்ந்த அல்லு அர்ஹா, ‘ஷாகுந்தலம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இந்த அழகிய படத்தில் என் மகளை அறிமுகம் செய்யும் குணசேகருக்கும், நீலிமாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என அல்லு அர்ஜுன் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

[youtube-feed feed=1]