புதுடெல்லி:
கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து, இனி அதிகாலை 6 மணி முதல் தாஜ்மஹால் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படும் என்று ஆக்ரா நிர்வாகம் அறிவித்துள்ளது.
தாஜ்மஹால் காலை 7மணிக்கு திறக்கப்பட்டு வந்ததால் அதன் அதிகாலை நேர அழகை ரசிக்க முடியவில்லை என புகார் எழுந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.