சென்னை: ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாக நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் இன்று திடீர் ஆலோசனை நடத்தினார். அவரது திடீர் அழைப்பு பரபரப்பாக விமர்சிக்கப்பட்டது. அண்ணா படத்தின் வெற்றிக்காக தனது ரசிகர்களை அவர் எப்போதும் போல பகடைக்காயாக பயன்படுத்துவே அழைப்பு விடுத்துள்ளார் என்று கூறப்பபட்டது.

முன்னதாக தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்த ரஜினிகாந்த் பின்னர் உடல்நிலை காரணமாக அரசியலில் ஈடுபடும் முடிவில் பின்வாங்கினார். பின்னர் அண்ணாத்த படப்பிடிப்புகளை முடித்த ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பியுள்ளார்.  அதையடுத்து, ந்நிலையில் இன்று மக்கள் மன்ற நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் தனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளதுடன், தனது ரஜினி மக்கள் மன்றத்தையும் கலைப்பதாக அறிவித்துள்ளார்.

மக்கள் மன்றம் மாறாக இனி ரஜினி ரசிகர் மன்றமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த விரிவான விளக்கத்தை ரஜினிகாந்த அறிக்கையாக வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.