
பிரபல எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை ஏராளமான ஆவணப் படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் ஏற்கனவே செங்கடல் என்ற படம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது இவர் இயக்கத்தில் மாடத்தி என்ற படம் நீஸ்ட்ரீம் என்ற ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்த படம் விருது வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லீனா மணிமேகலை தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
பைரசியில் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். பல கோடிகளை கொட்டி எடுக்கப்படம் படங்களை அதைவிட கோடிகளைக் கொடுத்து வாங்கி கொள்கின்றன நிறுவனங்கள். மாடத்தி படத்தின் நிலவரம் வேறு. @neestream தளத்தில் நீங்கள் டிக்கெட் வாங்கிப் பார்த்தால் மட்டுமே நான் அடுத்தமாதம் வீட்டுவாடகை கட்டமுடியும்” என பதிவிட்டுள்ளார் லீனா மணிமேகலை.
[youtube-feed feed=1]PiratedCopy பாக்கிறவங்களுக்கு ஒரு வேண்டுகோள்.கோடிகளைக் கொட்டி எடுக்கப்படும் படங்களை அதைவிட கோடிகளைக் கொடுத்து வாங்கிக் கொள்கின்றன நிறுவனங்கள்.மாடத்தி படத்தின் நிலவரம் வேறு.@neestream தளத்தில் நீங்கள் டிக்கெட் வாங்கிப் பார்த்தால் மட்டுமே நான் அடுத்தமாதம் வீட்டுவாடகை கட்டமுடியும்🙏🏽
— Leena Manimekalai (@LeenaManimekali) July 3, 2021