சிம்லா

மூத்த காங்கிரஸ் தலைவரும் இமாசல பிரதேச முன்னாள் முதல்வருமான வீரபத்ர சிங் மரணம் அடைந்துள்ளார்.

இமாச்சலப்பிரதேச மாநில சட்டப்பேரவை உறுப்பினராக 9 முறை வீரபத்ர சிங் தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.  இம்மாநில முதல்வராக 5 முறை பதவி வகித்துள்ளார்.  இவர் 1983 ஏப்ரல் 8 முதல் 1990 மார்ச் 5-ம் தேதிவரை முதல்வராகவும், 1993 முதல் 1998, 2003 முதல் 2007 வரை, 2012 முதல் 2017ம் ஆண்டுவரை  பதவி வகித்துள்ளார்.

மேலும் இவர் 1998 முதல் 2003 ஆம் ஆண்டு வரை  எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார்.  தற்போது 87 வயதாகும் வீரபத்ர சிங் கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக உடல் நலம் கு|றி இருந்தார்.  இதையொட்டி சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4 மணி அளவில் வீரபத்ர சிங் மருத்துவமனையில் காலமானார்.  வீரபத்ர சிங் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.   இவரது மனைவி பிரதிபா சிங் முன்னாள் எம்பி ஆவார். இவர் மகன் விக்ரமாதித்யா நிங் சிம்லா ஊரக தொகுதி எம் எல் ஏ ஆவார்.