சென்னை:
தமிழகத்தில் இன்று 1.37 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்ற முக்கிய இந்திய நகரங்களான மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் டெல்லி ஆகியவற்றை விட அதிகமாக உள்ளது.
சென்னையில், 8% மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளனர். இரண்டு டோஸையும் பெற்றவர்களின் சதவீதம் மும்பையில் 4%, பெங்களூர் மற்றும் டெல்லியில் தலா 5%, ஹைதராபாத்தில் 3%.
இந்த நகரங்களில், டெல்லியில்தான் அதிக மக்கள் தொகை உள்ளது. அதாவது, 3.1 கோடி. அவ்வளவு மக்கள் தொகையில் 5 சதவீதத்தை, எட்டியுள்ளது டெல்லி என்பது சாதனைதான்.
அதேநேரம், தடுப்பூசி குறித்த அச்சம் பெருமளவுக்கு இருந்த மாநிலம் தமிழகம். ஆனால், 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஆரம்பித்தது முதல் மக்கள் அதிக ஆர்வம் காட்டி தடுப்பூசி போட்டுக் கொண்டதன் விளைவாக, இப்போது நாட்டிலேயே அதிக தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட நகரமாகியுள்ளது சென்னை.
இந்நிலையில், இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் – 1.58 கோடிபேர்.
[youtube-feed feed=1]