டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவருமான பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி இன்று மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அபிஜித் முகர்ஜி மேற்கு வங்கத்தின் முன்னாள் எம்.பி.யாகவும் இருந்துள்ளார். சமீப காலமாக கட்சித்தலைவர்கள் மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக, அங்கிருந்து விலக முடிவு செய்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்தலைவர்களுன் பேச வந்தார்., கடந்த மாதம் மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் கட்சித்தலைவருமான மம்தாவுக்கு நெருக்கமான வட்டத்தில் இருக்கும் அபிஷேக் பானர்ஜியையும் சந்தித்துப் பேசினார். அப்போதே, அபிஜித் பானர்ஜி கட்சி மாறுவார் என தகவல்கள் பரவின.
சமீபத்தில் மம்தாவுக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்தார். அதாவது மேற்குவங்க மாநிலத்தில் நடைபெறற போலி தடுப்பூசி பிரச்சனையில் மம்தாவுக்கு ஆதரவாக டிவிட் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது டிவிட்டில், “போலி ஐ.ஏ.எஸ். ஆபீசர் ஒருவரின் தில்லுமுல்லுகளுக்கு மம்தாவை குறை கூறினால் பிறகு நிரவ் மோடி, விஜய் மல்லையா, மெகுல் சோக்சி முறைகேடுகளுக்கும் மோடியை குற்றம் சாட்ட வேண்டியதுதான், எனவே தனிமனித விஷமச் செயலுக்கு மம்தாவை குறைகூறிப் பயனில்லை” என்று சாடியிருந்தார்.
இந்த நிலையில், அபிஜித் முகர்ஜி இன்று அதிகாரப்பூர்வமாக திரிணாமூல் கட்சியில் சேருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அபிஜித் முகர்ஜியின் சகோதரி ஷர்மிஷ்டா முகர்ஜி தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில்தான் நீடிப்பார் என்று கூறப்படுகிறது.