டெல்லி: ஜப்பானில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக்கில் தமிழக வீரர் ‘தங்கமகன்’ மாரியப்பன் இந்திய கொடி ஏந்திச்செல்வார் என இந்திய பாரா ஒலிம்பிக் குழு அறிவித்து உள்ளது.

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக்2020 போட்டி இந்த ஆண்டு அக்டோபரில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்  அக்டோபரில் தொடங்கப்பட உள்ளன. இதற்கான வீரர்கள் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இருந்து 100க்கும் மேற்பட்ட வீரர்களுடன் சுமார் 200 பேர் கொண்ட வீரர்கள் குழு டோக்கியோ செல்ல உள்ளது.

இநத் நிலையில், அங்கு நடைபெற உள்ள பாரா ஒலிம்பில் போட்டியில் இந்திய கொடியை தமிழக தடகள வீரர் ஏந்தி வருவார் என இந்திய பாரா ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மாரியப்பன் தங்கவேலு 2016ம் ஆண்டில் பிரேசில் ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்ஸில் தமிழ்நாடு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரரான மாரியப்பன் உயரம் தாண்டுதலில்  தங்கம் வென்று சாதனை படைத்தார். அதையடுத்து, அப்போது நடைபெற்ற இறுதி விழாவிலும் இந்திய தேசிய கொடி ஏற்றி வலம் வந்தார். இந்த நிலையில், நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடக்க நிகழ்ச்சியிலும் மாரியப்பன் இந்திய கொடியை ஏந்திசசெல்ல உள்ளதாக கூறப்படுகிறது.