சென்னை: தமிழகத்தில் இன்றுமுதல் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.
சென்னை வானிலை மையம் நேற்று (ஜூன் 30) வெளியிட்ட தகவலில், தமிழ்நாட்டில் உள்ள 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியிருந்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தற்போது இந்திய வானிலை மையம் ஒரு வாரத்திற்கான வானிலை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
அதன்படி, இன்று பொதுவாக மேகமூடத்துடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வும், நாளையும் (2ந்தேதி) பொதுவாக மேகமூடத்துடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், 3ந்தேதியும் பொதுவாக மேகமூடத்துடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், 4ந்தேதி (ஞாயிறு) அன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், 5ந்தேதி அன்று பொதுவாக மேகமூடத்துடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், 6ந்தேதி மற்றும் 7ந்தேதி அன்று வெறும் மேகமுட்டம் மட்டுமே காணப்படும் என்றும் அறிவித்து உள்ளது.
சராசரியாக 25 டிகிரி சென்டிகிரேட் முதல் 27 டிகிரி வெப்ப நிலை இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.