புதுடெல்லி:
உலகின் பழமையான மொழியான தமிழின், தமிழ் கலாச்சாரத்தின் அபிமானி நான் என்று பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.
தமிழ் மொழி மீதான தனது அன்பு என்றுமே குறையாது என்று மன்கி பாத் வானொலி நிகழ்ச்சியில் மோடி பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், கொரானா அச்சுறுத்தல் தொடர்வதால் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும். நான் 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டேன்; 100 வயதுடைய எனது தாயும் 2 டோஸ்களை செலுத்தி கொண்டார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நமது வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.