கொல்கத்தா:
போலி தடுப்பூசி முகாம்களைக் கண்காணிக்க நான்கு மருத்துவர்கள் கொண்ட நிபுணர் குழுவை மேற்கு வங்க அரசு அமைத்துள்ளது.

கொல்கத்தாவில், நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மிமி சக்கரவர்த்தி, தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி கொண்ட நபர் மூலம் ஏமாற்றப்பட்டு போலி தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.

இதனால் அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து, போலி தடுப்பூசிகள் முகாம்களை நடத்தப்படுவதைத் தடுக்க மேற்கு வங்க அரசு நான்கு மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவை மாநில சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் மும்பையில் இரண்டாயிரம் பேருக்குப் போலி தடுப்பூசிகள் செலுத்திய வழக்கில் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.