
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.
படப்பிடிப்பு தொடங்கிய நாள்முதல் பல்வேறு தடைகள் தொடர, வலிமை படம் குறித்த சத்தமே வெளிவரவில்லை.
வலிமை அப்டேட் எனும் வார்த்தை,… அரசியல் தலைவர்களிடம் தொடங்கி… இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி வரைக்கும் போய் சேர்ந்தது.
படத்தின் தகவலை வெளியிடும்படி போனிகபூருக்கு அன்புடன் டிவீட் செய்து வந்த அஜித் ரசிகர்கள், ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து அலப்பறையை கொடுக்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது வலிமை . ட்விட்டரில் #ValimaiUpdate என எண்ணிலடங்கா ட்வீட் பார்க்க முடிகிறது.
Patrikai.com official YouTube Channel