சென்னை

மிழகத்தில் ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு ஒரு சில மாவட்டங்களில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும் திங்கள் கிழமை காலை 6 மணியுடன் முடிவடைகிறது.   ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையொட்டி தமிழகத்தில் ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.   மேலும் ஏற்கனவே அறிவித்த படி 3 வகையில் மாவட்டங்களில் தளர்வுகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி மூன்றாம் வகை பிரிவில் உள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நகைக்கடைகள், மற்றும் வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி அலிக்கப்ப்ட்டுள்ளன.

இங்கு தனியார் நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இந்த 4 மாவட்டங்களிலும் மத வழிபாட்டுத் தலங்கள் இயங்கலாம்.   ஆனால் அர்ச்சனை, திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை,   கடற்கரையில் காலை 5 மணி முதல் 9 மணி வரை நடைப்பயிற்சி செல்லலாம்.

மேலும் வகை 2 மற்றும் 3 பிரிவில் உள்ள மாவட்டங்களில் மாவட்டங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்து முழுமையாகத் தொடங்க உள்ளது  தீப்பெட்டி தொழிற்சாலைகள் 100% ஊழியர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட உள்ளது. 

தொற்று குறைந்த மாவட்டங்களுக்கு இடையே திருமண நிகழ்வுகளுக்கு இ பதிவு இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  ஆனால் திருமண நிகழ்வுகளில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் எங்கும் திரையரங்குகளுக்கு அனுமதி கிடையாது.  

முதல் வகை பிரிவு மாவட்டங்களில் எவ்வித தளர்வும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.