சில தினங்களுக்கு முன்னர் ’மேர்ஸைலா’ எனத் தொடங்கும் ‘மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியது. மதன் கார்க்கி எழுதியிருந்த இந்தப் பாடலை யுவனும் அவரது சகோதரி பவதாரணியும் பாடியிருந்தனர்.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’.

அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள், மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது சிம்புவுடன் தான் இருக்கும் படத்தைப் பகிர்ந்த யுவன், ஒரு நல்ல செய்தி வந்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அது என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

[youtube-feed feed=1]