சென்னை
தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார்ப் பள்ளிகளிலும் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க அரசு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு இட்டுள்ளது.
தற்போது கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புக்கள் மட்டுமே நடைபெறுகின்றன. தனியார் நடத்தும் மெட்ரிக், சி பி எஸ் இ, ஐ சி எஸ் இ, ஐ ஜி சி எஸ் இ, மற்றும் ஐபி பள்ளிகளில் முழு கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.
மேலும் ஒரு சில பள்ளிகளில் கட்டன செலுத்தாத மாணவர்களை ஆனலைன் வகுப்புக்களுக்கு அனுமதிக்காமல் கட்டணம் செலுத்தக் கட்டாயப்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்தன. கொரோனா பரவலால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பலர் பணிக்குச் செல்ல முடியாமல் வருமானம் இழந்துள்ள நிலையில் இது அவர்களுக்கு மிகவும் சுமையாக இருந்தது,
இந்நிலையில் இன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து தனியார்ப் பள்ளிகளிலும் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப் பட்டுளதுய். அத்துடன் தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தக் கட்டாயப் படுத்தக் கூடாது எனவும் கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்புக்கு அனுமதிக்காமல் இருக்க கூடாது எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.