ராமேஸ்வரம்

சி ஐ டி யு அமைப்பினர் இலங்கை அரசை எதிர்த்து ராமேஸ்வரத்தில் கண்டன ஆர்ப்பாடம் நடத்தி உள்ளனர்,

இலங்கை பல சர்வதேச விவகாரங்களில் தன்னிச்சையாக முடிவு எடுத்து வருகிறது.   இது குறித்து அண்டை நாடான இந்தியாவிடம் எப்போதுமே ஆலோசனை செய்வது கிடையாது.  இதனால் பல முறை இலங்கை நடவடிக்கைகளை எதிர்த்து இந்தியாவில் போராட்டம் நடைபெறுவது வழக்கமாகி வருகிறது.

சமீபத்தில் இலங்கை மீன்வளத்துறை மாஇச்சர் டகளஸ் தேவானந்தா மீன்கள் இனப் பெருக்கத்துக்காகப் பழைய பேருந்துகளைக் கடலில் இறக்கினார்.  அத்துடன் விரைவில் பழைய ரயில் பெட்டிகளையும் கடலில் இறக்க உள்ளதாகவும் அறிவித்தார்.  இது தமிழக மீனவர்களுக்கு கடும் அதிருப்தியை உண்டாகியதால் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில்  சிஐடியு அமைப்பினர் கண்டன போராட்டம் நடத்தி உள்ளனர். அவர்கள் சமூக இடைவெளியுடன் அந்தோனியார் கோவில் பகுதியில் கடலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இந்த சம்பவத்துக்கு இலங்கை அரசுக்கு மத்திய மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.