சென்னை: தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்  இன்று தொடங்கியது. முதல்நாள் கூட்டமான இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் ‘தமிழ் இனிமையான மொழி’  என தொடங்கி உரை நிகழ்த்தினார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை கைப்பற்றியது அதையடுத்து மாநிலத்தின்  16வது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. கொரோனா தொற்று பரவல் இருப்பதால், கலைவாணர் அரங்கத்தில் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல்நாள் கூட்டத்தொடரில் உரையாற்ற சட்டமன்றம் வந்த  ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். பின்னர் சபாநாயகர் இருக்கைக்குச் சென்ற ஆளுநர் , ‘காலை வணக்கம், தமிழ் இனிமையான மொழி, எளிமையான வாழ்க்கை வாழுங்கள்.’ எனக் கூறி தனது உரையை தொடங்கியுள்ளார்.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். ஆளுநர் உரை முடிந்தவுடன், அவரின் உரையை தமிழில் சபாநாயகர் மு.அப்பாவு வாசிப்பார். அந்துடன் முதல் நாள் கூட்டம் முடிவடையும்.

பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் எத்தனை நாட்கள் நடத்துவது என அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவு செய்து அறிவிக்கப்படும்.