காஞ்சிபுரம்
சென்னையில் இருந்து பெங்களூருக்கு 6 வழி நெடுஞ்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தியதில் ரூ.200 கோடி ஊழல் நடந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை 6 வழிப் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நிலங்கள் கையகப்படுத்தும், பணி நடந்தது. இந்த கையகப்படுத்திய நிலங்களுக்கு வழக்கும் இழப்பீடு தொகையைத் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் வழங்கி வந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதற்காகச் சிறப்பு அலுவலகம் இயங்கி வந்தது.
ஸ்ரீபெரும்புதூர் வட்டம் பீமந்தாங்கல் என்னும் கிராமத்தில் இந்த பணிக்காக நிலம் கையகப்படுத்தப்ப்ட்ட் சமயத்தில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அரசு நிலத்தைப் பட்டா மாற்றம் செய்து ரூ.200 கோடி இழப்பீட்டுத் தொகை 70க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊழல் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த நிலங்கள் பெரும்பாலும் நிலவரி திட்டத்தில் மேய்ச்சல் பு|புறம்போக்கு நிலமாகப் பதிவாகி இருந்தது. அந்த அரசு நிலங்களில் பெரும்பகுதி தற்போது தனியார் நிலமாகக் காட்டப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அரசு நிலங்களுக்கு ரூ.200 கோடி இழப்பீடு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தற்போதைய ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் காஞ்சிபுரம் மாவட்ட காவல் சூப்பிரண்டிடம் புகார் அளித்தர்.
இந்த புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிந்து போலி பட்டா மாற்றம் செய்த அப்போதைய வட்டாட்சியர், சிறப்பு வருவாய் அலுவலர், உள்ளிட்ட 8 பேர் மீது 7 பிரிவின் கீழ் வழக்கு பதியபப்ட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு நில நிர்வாக ஆணையர் பரிந்துரை செய்துள்ளார்.