download
நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்  பிறந்தநாள்( 1473)
 நிக்கோலாஸ்கோப்பர்னிக்கஸ்  வானியலாளரும், கணிதவியலாளரும், பொருளியலாளருமாவார். சூரியனை மையமாகக் கொண்ட புரட்சிகரமான கொள்கையை வகுத்துத் தந்து வானியலில் துறையின்  வளர்ச்சிக்கு வித்திட்டவர்.  பூமியை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற நிலவி வந்த நம்பிக்கையை  மாற்றி  சூரியனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன என உலகிற்கு   அறிவித்தவர்.
 
download (1)
சத்ரபதி சிவாஜி பிறந்தநாள் (1627)
சத்திரபதி சிவாஜி மகாராஜ்    மராட்டியப் பேரரசுக்கு அடித்தளம் அமைத்தவர்.  சாஹாஜி போஸ்லே மற்றும் ஜிஜாபாய்ஆகியோருக்குப் பிறந்த இரண்டு புதல்வர்களில், சிவாஜி இளைய மகனாவார்.
சிவாஜியின் ஹிந்தவி சுயராஜ்ஜிய சித்தாந்தமும், அதன் தொடர்ச்சியாக மராட்டிய பேரரசின் தொடர்ச்சியான விரிவாக்கமும் தற்போதைய மகராஷ்டிர வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பிரிட்டிஷ் பேரரசால் அவர்கள் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர், இந்தியாவில் சுதந்திர பேரரசை உருவாக்கவதிலும், ஒரு வெற்றிகரமான மராட்டிய தலைமுறையை ஊக்குவித்ததிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சிவாஜியின் கொள்கை, இந்துத்துவத்தை வலியுறுத்துவதாக தற்போது இந்ததுத்துவாதிகள் கூறுகிறார்கள். ஆனால், “அவரது சித்தாந்தம், இஸ்லாமிற்கு எதிராகவோ அல்லது இந்துத்துவத்தைப் பரப்புவதோ அல்ல.  ஒடுக்குமுறை ஆட்சியாளர்களால் தாக்குதல்களுக்கு உட்படாத ஓர் ஐக்கிய இந்தியா தான் சிவாஜியின் நோக்கமாக இருந்தது”  என்கிறார்கள் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்.
யுத்தத்தினஅ போது பெண்களுக்கு கொடுமை செய்தல், மத அடையாள சின்னங்களை அழித்தல், அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய மத மாற்றம் போன்ற – அப்போதிருந்த இருந்த –  பழக்கங்களை சிவாஜி எதிர்த்தார்.
அவரின் எதிரிகளை ஒப்பிடும் போது, பேரரசர் சிவாஜியிடம் மிகச் சிறிய இராணுவமே இருந்தது. மராத்தியில் கானிமி காவா என்றழைக்கப்படும், கொரில்லா உத்திகளைப் பயன்படுத்தி தனது எதிரிகளை வென்றார். அதனால் இரது தரப்புக்கு இழப்பு குறைவாகவும், எதிரி தரப்புக்கு பலத்த சேதமும் ஏற்பட்டன.
வதில் ஆகவே இந்த சமமின்மையைச் சமாளிக்க உதவும் வகையில் தான், அவர் கொரில்லா யுத்தத்தை செய்ய வேண்டி இருந்தது.
ஏப்ரல் 3, 1680 அன்று சிவாஜி மறைந்தார்.
 
download (2)
 
கோபால கிருஷ்ண கோகலே  நினைவு நாள் (1915)
மராட்டிய மாநிலத்தில் மே 9, 1866 அன்று பிறந்தகோபால கிருஷ்ண கோகலே சுதந்திர போராட்ட வீரர் ஆவார்   இந்திய தேசிய காங்கிரஸ்சின் மூத்த தலைவரும் இந்திய சேவகர்கள் அமைப்பை உருவாக்கியவரும் ஆவார்.
ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறுவது மட்டுமல்ல. சமுதாய மாற்றம் ஏற்பட்டு அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்று சமுதாய மறுமலர்ச்சிக்காகவும் போராடியவர் கோகலே.