சென்னை: பப்ஜி மதனிடம் ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என காவல்துறை மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டு உள்ளது.
இளைய சமுதாயத்தினரிடையே பிரபலமான பப்ஜி விளையாட்டை தனது யூடியூப்பில் வெளியிட்டு வந்தவர் மதன். இவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து ஆபாசமாக டிடியூபில் பேசியது சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக அவர்மீது புகார் எழுந்த நிலையில், அவரை கைது செய்ய சிபிசிஐடி காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அவர் தலைமறைவான நிலையில், அவரது மனைவியை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி மதன் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டனர்.
இதையடுத்து, நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் வினோத் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் தர்மபுரியில் வைத்து கைது செய்தனர். இதனையடுத்து மதனை சேலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு சோதனை நடத்தினர். இதனையடுத்து கைது செய்த மதனை வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். மேலும் பணப்பறிப்பில் மதன் ஈடுபட்டுள்ளாரா என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பப்ஜி மதனிடம் ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என காவல்துறை அறிவித்து உள்ளது. அதற்காக dcpcccb1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை கொடுத்துள்ளது.