சென்னை: தமிழகத்தில் ஆன்லைனில் பட்டப்படிப்பு நடத்த 10 கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் உட்பட 10 கல்வி நிறுவங்களுக்கு முழு அளவிலான ஆன்லைன் பட்டப்படிப்புகளை வழங்க பல்கலைக்கழக ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அழகப்பா, காமராஜர், சாஸ்திரா பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 10  உயர்கல்வி நிறுவனங்களில் ஆன்லைன் படிப்புகளில் மாணவர்கள் சேரலாம்.

BCA, BBA, B.Com, MCA, MBA, M.Sc உள்ளிட்ட 80 வகையான படிப்புகள் ஆன்லைனில் கற்க ஜூலை முதல் விண்ணப்பிக்கலாம்.ஆன்லைன் படிப்புகளை கற்றுத்தர உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் நடவடிக்கையை உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. கிட்டத்தட்ட 80 ஆன்லைன் படிப்புகளில் சேர இந்த ஆண்டு ஜூலை முதல் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.