முதலமைச்சர் ஸ்டாலின் தான் செல்லும் பாதையில் பாதுகாப்புப் பணியில் பெண் காவலர்களை நிறுத்த வேண்டாம்; அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். இந்த உத்தரவையடுத்து டிஜிபி திரிபாதி பெண் காவலர்களை இப்பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என ஆணையிட்டிருக்கிறார்.

பெண் காவலர்களின் நீண்ட நாளைய கோரிக்கையை ஸ்டாலின் நிறைவேற்றியிருக்கிறார். இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தி வெளிவந்ததும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை அனைவரும் பாராட்ட ஆரம்பித்தனர் .

கடந்த ஆண்டு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கி வெளியிட்ட ‘மிகமிக அவசரம்’ திரைப்படத்தின் தாக்கத்தை குறிப்பிட்டு இந்த செய்தியை பகிர்ந்து, நல்ல முன்னெடுப்பு.. இந்த முடிவுக்கு பாராட்டுகள் என இந்த அறிவிப்பு குறித்து தயாரிப்பாளர் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் செய்தியை பகிர்ந்துள்ள ‘மிகமிக அவசரம்’ படத்தின் இயக்குநரும் மாநாடு படத்தின் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி, “படைப்பு என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, அதைத் தாண்டி சமூகத்தில் என்ன மாற்றத்தை உருவாக்குகிறது என்பது மிக முக்கியம். அந்த வகையில் “மிகமிக அவசரம்” படம் எடுத்தற்காக உண்மையாகவே பெருமைகொள்கிறேன். பாராவிலிருந்து விலக்களித்த முதல்வர் @mkstalin அவர்களுக்கும் டிஜிபி அவர்களுக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து நெட்டிசன்கள் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை பாராட்டி வருகின்றனர்.