
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ்நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் ஜூன் 18-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஜூன் 7 அன்று ‘ஜகமே தந்திரம்’ படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியிடப்பட்டன.
‘ஜகமே தந்திரம்’ ஆல்பத்தில் இடம்பெற்ற ஜோசப் விஜய் என்ற பெயர் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் விஜய்யின் பெயர் என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யத் தொடங்கினர்.
‘ஜோசப் விஜய் என்பவர் என்னுடைய இசைக் குழுவில் கிதார் வாசிக்கும் ஒரு கலைஞர். என்னுடைய பாடல்களுக்கு அவர் கிதார் வாசித்து வருகிறார்’‘ என்று கூறியுள்ளார் சந்தோஷ் நாராயணன்.
[youtube-feed feed=1]