நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் இருக்கும் திரைப்பட கல்லூரியில் படித்து வந்தார். இதன் மூலம் அவர் விரைவில் தமிழ் திரையுலகில் இயக்குனராகவோ அல்லது நடிகராகவோ அறிமுகம் இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சமீப காலமாக விஜய் மகன் சஞ்சய் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக சமீபத்தில் சஞ்சய் காரில் செல்லும் வீடியோ மிகப்பெரிய அளவில் சமூக தளங்களில் வைரலானது.

இந்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் சஞ்சயை பார்த்த பலரும் சஞ்சய்க்கு ஹீரோ லுக் வந்துவிட்டது என்று கமெண்ட்ஸ்களை குவித்து வருகின்றனர்.

https://twitter.com/IamJasonSanjay/status/1401889151897640960