சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார், காளி வெங்கட், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மகாமுனி’. 2019-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி வெளியான இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்தது.

இதனிடையே, ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார் இயக்குநர் சாந்தகுமார். இதற்கு ஆர்யா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தனது முதல் ட்வீட்டாக ‘மகாமுனி’ வாங்கிய விருதுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார் இயக்குநர் சாந்தகுமார்.

” ‘மகாமுனி’ 9 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. 2 போட்டிகளில் இறுதிவரை சென்றுள்ளது. 1 விழாவில் சிறந்த அயல் மொழித் திரைப்பட விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. 2 முறை அதிகாரபூர்வமாக விருது விழாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பாராட்டுகள் இன்னும் தொடர்கின்றன”.

இவ்வாறு இயக்குநர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.