முன்னணி தயாரிப்பாளரான R.B.சௌத்ரி மீது நடிகர் விஷால் போலீசில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் :

“‘இரும்புத்திரை’ படத்துக்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்திய பிறகும் தயாரிப்பாளர் திரு. ஆர்.பி. செளத்ரி என் காசோலைகள், பத்திரங்கள் மற்றும் உறுதிமொழி ஆவணங்களை திருப்பித் தரத் தவறியதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவரை ஏதேதோ சாக்கு போக்கு சொல்லிக்கொண்டிருந்த அவர், கடைசியாக ஆவணங்களை காணவில்லை என கூறினார். இதனால் அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளோம்” என கூறியுள்ளார்.

விஷால் சார்பில் அவருடைய மேனஜர் ஹரிகிருஷ்ணன், புகார் மனுவை காவல் துறையிடம் அளித்துள்ளார். அந்த புகார் மனுவோடு ஆர்.பி. சவுத்ரி தரப்பு செக் மற்ற இதர ஆவணங்களுக்காக அளித்த 100 ரூபாய் ஸ்டாம்ப் அக்ரிமெண்ட் காப்பியும் இணைத்துள்ளனர். இதுதொடர்பாக மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.