சூரியை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை இயக்குகிறார் வெற்றிமாறன். எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படபிடிப்பு தற்போது சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடந்து வருகிறது. இதற்கு விடுதலை என டைட்டில் வைத்துள்ளது படக்குழு.
எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். இதன் மூலம் வெற்றிமாறன் – இளையராஜா கூட்டணி முதன்முறையாக இணைகிறது.
இந்தப் படத்தில் ஹீரோயினாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடிக்கிறார். இவர் ஏற்கனவே க/பெ ரணசிங்கம் படத்தில், விஜய் சேதுபதியின் தங்கையாக நடித்திருந்தார். முன்னதாக, விஜய் சேதுபதி இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை சோனி மியூசிக் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.