சென்னை:
ந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில் நிலங்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சுமார் 40,000-த்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களுக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. ஆனால், அதில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலங்களை மீட்டெடுக்கவேண்டும் என்று பல காலமாக கோரிக்கைகள் எழுந்துவருகின்றன.

மேலும், அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக நீதிமன்றங்களிலும் வழக்குகள் உள்ளன.
இந்தநிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சர் சேகர் பாபு, கோயில் சொத்துகள் குறித்து வெளிப்படைத்தன்மையாக இணையத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு இந்து அறநிலைத் துறை சார்பாக கோயில்களில் அதற்குச் சொந்தமான நிலங்கள் பற்றிய விவரங்கள் தற்போது அதன் இணையதளத்தில் www.hrce.tn.gov.in சென்று பொதுமக்கள் பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.