வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். சிம்பு, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்பட ஏராளமானோர் இதில் நடித்துள்ளனர். கல்யாணி ப்ரியதர்ஷன் நாயகியாக நடித்துள்ளார் . யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் முதல் பாடல் ரம்ஜான் அன்று வெளியாவதாக இருந்தது. ஆனால், வெங்கட் பிரபுவின் தாயார் மறைவால் ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ‘மாநாடு’ கொரோனா இரண்டாவது அலை தீவிரத்தால், படக்குழுவினர் பாடல் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளனர்.
இந்நிலையில் மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெகு விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தற்போது, கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ரசிகர்கள் மீண்டும் பாடல் குறித்து கேட்க ஆரம்பித்துள்ளனர். அதற்கு பதிலளித்த சுரேஷ் காமாட்சி, மாநாடு படத்தின் இசை உரிமையை யுவனின் யு1 ரெக்கார்ட்ஸ் வாங்கியுள்ளது. முதல் சிங்கிள் எந்த தேதியில், எத்தனை மணிக்கு வெளியாகும் என்பதை புதன்கிழமை லிட்டில் மேஸ்ட்ரோ அறிவிப்பார் என தெரிவித்துள்ளார்.
அதன்படி சற்று முன்னர் யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டரில் ’மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடல் வரும் 21ம் தேதி வெளியாகும் என்று அறிவித்து உள்ளார்.