மும்பை
இந்தியாவின் மிகப் பிரபலமான ஓட்டலான ஹயாத் ரீஜன்சி ஓட்டல் நிதிப் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப் பிரபலமான ஹயாத் ரீஜன்சி ஓட்டல்கள் அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ஹயாத் ஓட்டல் கார்ப்பரேஷன் அமைப்புக்குச் சொந்தமானவை ஆகும். உலகம் முழுவதும் பல ஓட்டல்களை நடத்தும் இந்த நிறுவனம், இந்தியாவில் ஹயாத், ஹயாத் செண்டிரிக், ஹயாத் ரீஜன்சி உள்ளிட்ட 8 ஓட்டல்களை நடத்தி வருகிறது.
இந்த குழுமம் 1982 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் பல வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதில் உணவகங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக நட்சத்திர உணவு விடுதிகள் அடியோடு பணி இன்றி உள்ளன. இதில் ஹயாத் ரீஜன்சி ஓட்டலும் ஒன்றாகும்.
இந்நிலையில் இந்நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“ஹயாத் ரீஜன்சி ஓட்டல்களின் உரிமையாளரான ஆசியன் ஓட்டல்ஸ் நிறுவனத்திடம் ஊழியர்களின் ஊதியம் மற்றும் நடைமுறை செலவுக்கு நிதி இல்லாமல் உள்ளது. எனவே அனைத்து ஊழியர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ஹயாத் ரீஜன்சி மும்பை உணவகத்தில் அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை உணவகம் மூடப்பட்டிருக்கும்”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் ஏற்கனவே தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற விட்கோ நிறுவனம் மூடப்பட்ட நிலையில் தற்போது மும்பையில் பிரபல உணவகம் மூடப்பட்டது அதிர்ச்சியை அளித்துள்ளது.
[youtube-feed feed=1]