2013-ஆம் ஆண்டு மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் வெளியாகி வசூல் குவித்த திரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் கமல்ஹாசன், கவுதமி நடித்து இருந்தனர். தெலுங்கு, இந்தி, கன்னடம், சீன மொழிகளிலும் திரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், திரிஷ்யம் படத்தின் 2-ம் பாகமும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தையும் தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் சீன மொழிகளில் ரீமேக் செய்வதாக அறிவித்து உள்ளனர்.
கோர்ட்டு வழக்கினால் இந்தியன் 2, விக்ரம் ஆகிய 2 படப்பிடிப்பிலும் கமல்ஹாசன் பங்கேற்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில் பாபநாசம் 2 படத்தில் ஒரு மாதத்தில் நடித்து முடித்து விடலாம் என்பதால் அதில் நடிப்பதற்கு கமல்ஹாசன் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.